×

சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட தமிழ்நாடு நிதிநிலை அறிக்கைக்கு அமைச்சர் உதயநிதி வரவேற்பு

சென்னை: சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2024 – 2025ம் ஆண்டு தமிழ்நாடு நிதிநிலை அறிக்கைக்கு அமைச்சர் உதயநிதி வரவேற்பு அளித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலோடு தடைகளைத் தாண்டி வளர்ச்சியை நோக்கி’ என்ற முழக்கத்தோடு தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2024 – 2025 சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கலைஞர் கனவு இல்லம் திட்டம், வறுமையை ஒழிக்க முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்துக்கு ரூ.13,720 கோடி ரூபாய், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.35,000 கோடி அளவில் வங்கிக் கடன் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசுப்பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டம், அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கும் ‘புதுமைப்பெண்’ திட்டம், கிராமப்புற அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு முதலமைச்சரின் காலை சிற்றுண்டித் திட்டம், கோவையில் முத்தமிழறிஞர் கலைஞர் நூலகம்,

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 200 கோடி மதிப்பில் திறன் பயிற்சிக் கட்டமைப்புகள், ஒன்றிய அரசுப்பணிகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு பயிற்சியுடன் கூடிய உண்டு உறைவிட விடுதிகள், இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை வளர்ச்சிக்கு ரூ.440 கோடி, மாற்றுத்திறனாளிகள், திருநங்கையரை பணிக்கு அமர்த்தும் நிறுவனங்களுக்கு ஊதியத்தில் பத்து சதவீதம் மானியம், ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்ட தொழில் துறைக்கு ரூ.2,295 கோடி என

சமூகநீதி, மொழி, கல்வி, தொழில் வளர்ச்சி ஆகியவற்றை அடிநாதமாகக் கொண்டு, நம் திராவிட மாடல் அரசின் அடுத்த பாய்ச்சலுக்கான நிதி நிலை அறிக்கையாக அமைந்துள்ள 2024 – 2025 நிதி நிலை அறிக்கையை வரவேற்று மகிழ்கிறோம் என்று அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

The post சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட தமிழ்நாடு நிதிநிலை அறிக்கைக்கு அமைச்சர் உதயநிதி வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Minister ,Udayanidhi ,Tamil Nadu ,Chennai ,Assembly ,Chief Minister ,M.K.Stal ,
× RELATED செஸ் போட்டிகளில் குகேஷின் வெற்றி...